பொம்மை மனிதர்கள் வாழும் ஊர்! | Nagoro: Japan's Strange Village of Dolls - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

பொம்மை மனிதர்கள் வாழும் ஊர்!

உலகம்

ப்பான் நாட்டில் தீவுகள் அதிகம். அதில் ஒரு தீவுதான் ‘ஷிகொக்கு' தீவு (Shikoku). இந்தத் தீவில், ‘நகோரோ' (Nagoro) என்ற கிராமம் உள்ளது. ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வசித்தனர். ஆண்டுகள் செல்லச் செல்ல தங்களின் ஜீவாதாரத்தைத் தேடி நகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். தற்போது அந்தக் கிராமத்தில், பென்ஷன்தாரர்களும் வயதானவர்களும் மட்டுமே வசிக்கிறார்கள்.

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ‘அயனோ சுகிமி’ (Ayano Tsukimi) என்ற பெண்ணும் அப்படித்தான் ஒசாகா நகரக்குச் சென்றார். சில ஆண்டுகள் கழித்து, தன் சொந்தக் கிராமத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் திரும்பிவந்தார். ஆனால், தன் சொந்த மண்ணில் காலடி வைத்ததும் மக்கள் நடமாட்டமே இல்லாமல் கிராமம் வெறுச்சோடிக் கிடந்ததைப் பார்த்த சுகிமிக்கு அதிர்ச்சி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க