ஹுசைன் - மணிமேகலை: காதல், கல்யாணம், தீபாவளி! | Interview with Famous VJ Manimegalai and his husband hussain - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

ஹுசைன் - மணிமேகலை: காதல், கல்யாணம், தீபாவளி!

சின்னத்திரை

``தலை தீபாவளிங்கிற வார்த்தை. சின்ன வயசுல இருந்தே நம் எல்லோருக்கும் பழக்கப்பட்டதுதான். நம்ம சொந்தக்கார அக்கா, அண்ணானு யாருக்குக் கல்யாணம் நடந்தாலும், தலை தீபாவளியை அவங்க செமையா செலிபிரேட் பண்றதைப் பார்த்துப் பழகியிருப்போம். நானும் அப்படித்தான். `நமக்கும் ஒருநாள் இந்தத் தலை தீபாவளி வரும். அன்னைக்கு நானும் என் கணவரும் எங்க வீட்டுல செமையா கொண்டாடுவோம். என் கணவருக்கு எங்க வீட்ல இருந்து செயின், மோதிரம் போடுவாங்க'னு பல விஷயங்கள் நினைச்சு வெச்சிருந்தேன். ஆனா, அது எதுவுமே எங்களோட தலை தீபாவளிக்கு நடக்கப்போறதில்லை. சந்தோஷமா இருந்தாலும்; சோகமா இருந்தாலும் அது எங்க ரெண்டு பேருக்குள்ளேயே முடிஞ்சிடும்'' சற்றே சோக மனநிலையுடன் பேசும் மணிமேகலையைத் தேற்றுகிறார் அவரின் கணவர் ஹுசைன். சன் மியூசிக் வி.ஜே மணிமேகலைக்கு இது தலை தீபாவளி.

``எங்க லைஃப்ல எதுவுமே பிளான் பண்ணி நடக்கலை. காதலும் கல்யாணமுமே திடீர்னு நடந்துடுச்சு. அதனாலேயே நாங்க எதையும் பிளான் பண்றதில்லை. என்னைப் பொறுத்தவரை மனைவியோடு சந்தோஷமா தீபாவளியைக் கொண்டாடணும். பட்டாசு வெடிச்சுப் பல வருஷமாச்சு; அதனால, அன்னைக்கு நல்லா பட்டாசு வெடிக்கணும்னு தோணுது!'' என தீபாவளி பிளான் சொல்லும் ஹுசைனை ஆமோதித்தபடி தொடர்ந்தார், மணிமேகலை.