தந்தை சொல்லே மந்திரம்! - ‘கடம்’ விநாயகராம் | Interview With Vikku Vinayakram - Vikatan Diwali malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

தந்தை சொல்லே மந்திரம்! - ‘கடம்’ விநாயகராம்

இசை

திருவல்லிக்கேணி, அய்யா தெருவிலுள்ள இரண்டு மாடி பங்களா. வெளிச் சுவரில் `ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா அனுக்கிரஹா' என்று பெரிய எழுத்துகளில் வீட்டின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. கோட்டைக் கதவுகள் மாதிரி வாசலில் இரும்பு கேட். பலம்கொண்டு அழுத்தித் திறந்து உள்ளே நுழைந்தவுடன் படிக்கட்டுகள் வழியே இரண்டாவது மாடிக்கு அனுப்பிவைத்தார்கள்.