“அன்புதானே கலையின் நிரந்தர சாராம்சம்!” - மணியம் செல்வன் | Illustrator Maniam Selvam interview - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

“அன்புதானே கலையின் நிரந்தர சாராம்சம்!” - மணியம் செல்வன்

கலை

யிலாப்பூரிலுள்ள ஓவியர் ம.செ-வின் வீட்டு வரவேற்பறை. சுவரில் அவரின் அப்பா வரைந்த பூம்புகார் ‘இந்திர விழா’ ஓவியம். கடலுக்கு நடுவே அலைகளின் இசைமையில் மிதக்கும் நாவாய்களில் நடனமிடும் பெண்கள், இசைத்திடும் கலைஞர்கள் என நம்மைக் கனவுலகுக்கு அழைத்துச் செல்கிறது. ம.செ புன்னகையோடு வந்து அமர்கிறார்.

“ ‘வேள்பாரி’ தொடருக்கு ஓவியம் வரையும் அனுபவம் எப்படியிருக்கிறது?''

“கல்கி, சாண்டில்யன், கோ.வி.மணிசேகரன் எனப் பலரின் சரித்திரப் படைப்புகளுக்கு வரைந்திருக்கிறேன். என்றாலும், ஒரு கலைஞன் எதிலும் முழுமையடைந்துவிட முடியாது. காலம்தோறும் தன்னையும் தனது கோடுகளையும் அவன் புதுப்பித்துக்கொண்டேயிருக்க வேண்டும். அதற்கு மிக நல்ல வாய்ப்புகள் அமைவதும் முக்கியம். அந்த வகையில், `வேள்பாரி' ஒரு நல்ல வாய்ப்பு. ஏனென்றால், ஒரு நல்ல படைப்பு அமைந்தால்தான் அதற்கான ஓவியத்தையும் சிறப்பாகச் செய்ய முடியும். படைப்பு, ஓவியம், அதை வெளியிடுகிற பத்திரிகை, அதன் வாசகர்கள் என இது ஒரு நல்ல கூட்டணி. எனவே, மகிழ்ச்சியாக நான் பங்களிக்கிறேன்.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க