“கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் அழகை வார்த்தையால் விவரிக்க முடியாது!” - `நீயா நானா' கோபிநாத் | TV Anchor Neeya Naana Gopinath interview - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

“கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் அழகை வார்த்தையால் விவரிக்க முடியாது!” - `நீயா நானா' கோபிநாத்

சந்திப்பு

ஞாயிறு மதியங்களில் வீட்டில் ஹாயாக அமர்ந்து, `நீயா நானா'வில் கோபிநாத் பேசுவதை ரசித்துக்கொண்டிருப்போம். ஞாயிறு மதியம் கோபிநாத் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார்?! சென்னை, கே.கே நகரில் இருக்கும் அவர் வீட்டுக்கு ஒரு ஸ்பெஷல் விசிட்!

``பாப்பா டேய்.... அப்பாவுக்கு இந்த போர்டு கேம் தெரியல... எப்படி விளையாடுறதுனு சொல்லிக்கொடுடாம்மா..!’’ என மகள் வெண்பாவிடம் கோபி கெஞ்சிக்கொண்டிருக்க, அவளோ டிராயிங், பெயின்டிங்கில் மும்முரமாக இருந்தாள். கோபியின் பெற்றோரிடம் தீபாவளி விசேஷ ஏற்பாடுகள், பர்ச்சேஸ் பற்றி கோபியின் மனைவி துர்கா விவாதித்துக்கொண்டிருந்தார். ‘நீயா நானா’ நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்த கோபியின் மாமியார், ‘அந்த சிவப்பு சுடிதார் பொண்ணு துடியா பேசுது... அதை இன்னும் நல்லா பேச விட்ருக்கலாம்!’’ என ரன்னிங் கமென்ட்ரி கொடுத்துக்கொண்டிருந்தார். ``இதுதான் என் உலகம்!’’ என்று சிரிக்கிறார் கோபி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க