“என் நிறம் என் பலம்!” - `கலக்கப்போவது யாரு' நிஷா!

சின்னத்திரைமா.கிருபன், படம்: என்.ஜி.மணிகண்டன்

ரு பெண்ணால் காமெடியில் இந்த அளவுக்கு இறங்கி அடிக்க முடியுமா?! - முடியும் என நிரூபித்திருக்கிறார், `அறந்தாங்கி' ஜகுபர் நிஷா. விஜய் டி.வி-யின் `கலக்கப்போவது யாரு' சீசன் 5 நிகழ்ச்சியில் `ரன்னர் அப்' பட்டம் வென்றவர். சிரிப்பும் பேச்சுமாகக் கலகலவென ஆரம்பிக்கிறார்.

``நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே அறந்தாங்கிதான். பள்ளிக்கூடத்தில் ஃபெயில் மார்க் வாங்கினாகூட சந்தோஷமா கையெழுத்து போடும் அப்பா, அம்மா. ஸ்கூல்ல நான் அடிவாங்காத நாளே கிடையாது, என்னை அடிக்காத டீச்சரும் கிடையாது. தூங்கும்போது மட்டும்தான் என் வாய் மூடியிருக்கும். அப்படி இப்படினு தப்பித் தாவி ஒருவழியா ப்ளஸ் ஒன் வந்தேன். பிறகு ஒருமுறை மேடை ஏறிப் பேச ஆரம்பிச்சேன். அந்தப் பயணம் இப்போ வரைக்கும் தொடருது...” என்பவரைப் பார்த்துச் சிரித்தபடி தொடர்கிறார், நிஷாவின் கணவர் ரியாஸ் அலி.

``இவங்க அம்மா இன்னும் `நீயெல்லாம் எப்படி உருப்பட்ட'னு கேட்குறாங்க'' என மனைவியைக் கலாய்ப்பவர், தயக்கமில்லாமல் பாராட்டவும் செய்கிறார். ``படிப்பைத் தவிர, இவங்களுக்கு ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் அதிகம். இப்போ மேடையில கபடி ஆடுறாங்க. இந்த ஃபீல்டுக்கு வரலைனா, கிரவுண்டுல ஆடிப் பாடியிருப்பாங்க. வாலி பால், பாஸ்கெட் பால், கபடி... இந்த மூணும் இவளோட ஆல்டைம் ஃபேவரைட் விளையாட்டு!” என்றவரைத் தொடர்ந்து பேசுகிறார், நிஷா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்