“என் மனைவிதான் எனக்கு முன்மாதிரி” - `கலக்கப்போவது யாரு'பழனி

சின்னத்திரை- பெ.வீ.மாரியப்பன், படம்: தி.ஜீவாகரன்

``சொந்த ஊர் வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை. மீனவக் குடும்பம். பிறந்து வளர்ந்தது எல்லாமே கடலோரம்தான். கடலுக்குப்போன மகன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில அவன் பேர்ல இன்னமும் எல்.ஐ.சி பிரீமியம் கட்டிட்டிருக்கிற நிறைய அப்பாக்களை எனக்குத் தெரியும். அதேபோல, 25 வருஷத்துக்கு முன்னால் கடலுக்குப்போய்க் காணாமல்போன கணவன் வருவார்னு இன்னமும் காத்திருக்கிற சகோதரிகள் பலர் இருக்காங்க. அந்தத் தன்னம்பிக்கை மனிதர்களோட பிறந்து வளர்ந்ததால, என் மனசுலயும் எப்பவும் அந்தத் தன்னம்பிக்கை உண்டு'' என்கிற பழனி, `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் பவர் பர்ஃபாமர்களில் ஒருவர். இன்று, பரபரப்பான சினிமா நடிகர். இவரின் மனைவி சங்கீதா, தமிழ்ப் பேராசிரியை; மேடைப் பேச்சாளரும்கூட. காதல் திருமணம் செய்தவர்கள். இருவரும் காதல் வளர்த்த கதை சொல்கிறார்கள்.

“அப்பா சுப்ரமணியன், நிதி மேலாளர். அம்மா இந்தி பண்டிட். எங்க குடும்பம் பக்கா ஆசாரம். ஸ்கூலுக்கு அனுப்பவே யோசிப்பாங்க. என்கூடப் பிறந்தவங்க ரெண்டு தங்கச்சிங்க. வீட்ல அமைதியான பொண்ணுனா அது நான்தான். பள்ளியில பெரிய படிப்பாளியெல்லாம் கிடையாது. ஆறாம் வகுப்புலதான் முதல்முறையா மேடை ஏற வாய்ப்பு கிடைச்சுது. பளிச் பளிச்னு பேசிட்டேன். ‘பூமிக்குக்கூட நோகாம நடக்குற சங்கீதாவா இப்படிப் பேசிப் பரிசு வாங்குறா’னு என் காதுப்படவே சிலர் பாராட்டினாங்க. ‘பொம்பளப் புள்ளைக்கு இந்த வேலை எதுக்கு’னு சிலர் சொல்லவும் செஞ்சாங்க. எனக்கு, இன்னும் பெருசா சாதிக்கணுங்கிற எண்ணம் வரக்காரணம் அந்த விமர்சனங்கள்தான். இதோ இன்னைக்கு எத்தனையோ மேடைகளைப் பார்த்துட்டேன். ஆனா, இன்னமும் அந்த ஆறாம் வகுப்பு மாணவி மாதிரிதான் மேடைப் பேச்சுக்கு ரிகர்சல் பண்ணிட்டிருக்கேன்!” என சங்கீதா பேச, அதை அமைதியாகக் கவனித்தபடி இருக்கிறார் பழனி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்