“சொன்னதைச் செய்த சிவகார்த்தி!” - `கலக்கப்போவது யாரு' தனசேகர்!

சின்னத்திரை

``பிறந்தது, வளர்ந்தது  எல்லாமே சென்னை தேனாம்பேட்டைதான். நல்லது கெட்டது எல்லாமே இங்கேதான். எப்பவும் எங்க வீட்டைச் சுற்றி சொந்தகாரங்க இருந்துக்கிட்டே இருப்பாங்க. அப்பா பாலகிருஷ்ணனுக்கு பின்னி மில்லில் வேலை. அங்கேயே என்னையும் சேர்த்துவிடணும்னு ஆசைப்பட்டார். டிப்ளோமா எலெக்ட்ரானிக் படிச்சிட்டு, நானும் அங்கேயே வேலைக்குப் போனேன். காசைப் பொறுத்தவரைக்கும் எந்தக் குறையும் இல்லை. இருந்தாலும், கலைமீதான தாகம் என்னைத் தூங்கவிடலை.

 விஜய் டி.வி `கலக்கப்போவது யாரு' ஆடிஷன் நடக்குதுனு கேள்விப்பட்டு, போய்க் கலந்துகிட்டேன். அதுல ஜெயிச்சதும் ரொம்பவும் உற்சாகமாயிட்டேன். இந்த நிகழ்ச்சி கொடுத்த அடையாளம்தான் விஜய் டி.வியின் நிரந்தரப் பணியாளராக்கியது. இப்போ, `கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்' நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் பண்றேன். குழந்தைங்ககிட்ட நடிப்பை வாங்குறதே பெரிய எனர்ஜியா இருக்கு'' என்ற தனசேகர், தன் மனைவி நித்யாவை அறிமுகம் செய்தார். தனசேகர் `கலக்கப்போவது யாரு' சீசனின் சீனியர். மிஸ்டர் ஜாக்... அந்த கொடிய மிருகம் நம்மள நோக்கித்தான் வருது...' என்று இவர் மிமிக்ரி செய்ய ஆரம்பித்தால், `இருக்கு... இன்னைக்கு காமெடி இருக்கு' என புரிந்துகொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்