“நீயா-நானா கோபிநாத்தா நடிச்சதுதான் என் ரியல் அறிமுகம்!” - ``கலக்கப்போவது யாரு''பழனி பட்டாளம்

சின்னத்திரை

``என் சொந்த ஊர் சென்னை பக்கத்துல அயனம்பாக்கம். என்கூட பிறந்தவங்க மொத்தம் மூணு பேர். எல்லோரையும் எங்க அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தார். அம்மா, எங்களுக்காகவே வெளி உலகத்தைப் பற்றி எதுவும் தெரிஞ்சுக்காம, எங்களைப் பொத்திப் பொத்தி வளர்த்தாங்க.'' - தனது குடும்பப் பின்னணி குறித்த அறிமுகத்துடன் தொடங்குகிறார், 'கலக்கப் போவது யாரு' பழனி பட்டாளம்.

``எங்க ரெண்டாவது குழந்தை, பழனி. சின்ன வயசுலேயே குடும்பக் கஷ்டம் தெரிஞ்சு வளர்ந்தவன். வீட்டுல இருக்கிற யாரையும் எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டான். ரொம்ப மரியாதையாவும் நடத்துவான். அவனுக்கு படிப்பைவிட, கலை மேல ஆர்வம் அதிகம்'' எனப் பெருமைப்பட்டுக்கொள்கிறார், பழனியின் அப்பா முத்து.

``ஆரம்பத்துல எல்லோரும் ஒண்ணா கூட்டுக் குடும்பமாதான் இருந்தோம். மூணு பசங்களுக்கும் கல்யாணம் முடிச்சுக்கொடுத்த பிறகும், ஒண்ணாதான் இருந்தோம். எங்களுக்குப் பேரன், பேத்தியெல்லாம் பிறந்து வளர்ந்தபிறகு, நாங்க தங்கியிருந்த வீடு பத்தாமப் போச்சு. அதனாலதான், தனிக்குடித்தனம் போனாங்க. ஆனாலும், எல்லோரும் ஒரே தெருவில்தான் வசிக்கிறோம்'' என நெகிழ்கிறார், பழனியின் அம்மா காந்தம்மாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்