உலகின் ஆதி மனிதன் தமிழன்... அடித்துச் சொல்லும் குடியம் குகைகள்!

பயணம்

13 கோடி ஆண்டு மலைகள்...
16 லட்சம் ஆண்டு கல்லாயுதங்கள்...
3 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதத் தடங்கள்...

`சென்னைக்கு மிக அருகில்' என மனிதர்கள் வாழ உகந்த இடம் பற்றிய விளம்பரங்கள் வெளிவருவது தெரியும். சென்னைக்கு மிக அருகில், ஆதி மனிதர்கள் வாழ உகந்த இடங்கள் இருந்தது நம்மில் பலருக்குத் தெரியாது. அதுதான் குடியம் குகைகள். சுமார் அறுபத்துச் சொச்சம் கி.மீ தூரத்தில் ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகைகள்.

அதிகாலை ஐந்து மணிக்கே புறப்பட்டோம். சென்னை, செங்குன்றம், தாமரைப் பாக்கம், வெங்கல், சீத்தஞ்சேரி, பிளேஸ்பாளையம், குடியம் கிராமம் - இதுதான் சென்னையிலிருந்து குடியம் செல்லும் வாகனச் சாலை. அங்கிருந்து ஆறு கிலோ மீட்டர்கள் காட்டுப்பாதையில் நடக்க வேண்டும். சீத்தஞ்சேரியிலேயே ஆளுக்கு நான்கு இட்லி பார்சல் கட்டிக்கொண்டோம். `வெயில் தலைகாட்டுவதற்கு முன்பே நடக்க ஆரம்பித்தால்தான், உச்சிவெயிலுக்குமுன் திரும்ப முடியும்' என உஷார் படுத்தியிருந்தார் நமக்கு வழிகாட்டியாக வந்த கமலக்கண்ணன். குடியம் கிராமத்தைச் சேர்ந்தவர். பல ஆய்வாளர்களுக்கும் வழிகாட்டியாகக் காட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்.

மனிதர்கள் நடந்து உருவான வழித்தடம். வழித்தடம் முழுக்கக் கூழாங்கற்கள். இரண்டு பக்கமும் புதர்மண்டிய காடு. ‘`காட்டுப் பன்றி, பாம்பு, நரி  எல்லாம் இருக்கும், பார்த்து வாங்க’’ என எச்சரித்தார் கமல். ஒருவரை ஒருவர் பார்த்து, ‘‘பாதி வழியில சொல்றீங்களே?’’ எனச் சிரித்துக்கொண்டோம். மரக்கிளைகளுக்கிடையே சூரிய கிரணங்கள் நுழைந்து ஏற்படுத்தும் மெல்லிய வெளிச்சம். பல்விதமான பறவைகளின் கீச்... குக்கூ... குர்... ஒலிகள் எங்களுடைய வருகையைக் காட்டுக்கு அறிவிப்பது தெரிந்தது. மனிதகுல வரலாற்றை மனதுள் அசைபோட்டபடி நடக்கத் தொடங்கினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்