“என்ன மச்சான்... சொல்லு புள்ள..!” - `சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி | Super Singer Senthil ganesh and Rajalaxmi interview - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

“என்ன மச்சான்... சொல்லு புள்ள..!” - `சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி

சின்னத்திரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களபம் என் ஊர். வானம் பார்த்த பூமி. விவசாயம் செய்ய நீர்ப்பாசனம் பெரிய அளவில் இல்லை. சுத்தி இருக்கிற தைல மரங்கள், இருக்கின்ற கொஞ்சநஞ்ச நிலத்தடி நீரையும் உறிஞ்சிக் கொள்ளும். மழைக்காலம் தவிர, மற்ற காலங்களில் எங்கள் ஊரில் வறட்சிதான். அதனால், ஊரில் இருப்பவர்கள் பெரும்பாலும் கூலி வேலைக்குத்தான் செல்வார்கள். அங்கே களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவது உண்டு'' - பாடலுக்குப் பின்னால் இருக்கும் ஃபிளாஷ்பேக் கதையிலிருந்து தொடங்குகிறார், செந்தில் கணேஷ். `சூப்பர் சிங்கர்' சீஸன் 6-ல் வெற்றிபெற்று புகழேணியில் ஏறியிருக்கும் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடியிடம் பேசினோம்.

``விசேஷ காலங்களில் மைக்செட் கட்டி நாட்டுப்புறப் பாடல்களை ஒலிக்கவிடுவார்கள். எங்கள் ஊரின் புகழ்பெற்ற நாட்டுப்புறக் கலைஞர்கள் கோட்டைச்சாமி, ஆட்காட்டி ஆறுமுகம், மாரியம்மாள். இவர்களுடைய பாடல்களைக் கேட்டுதான் நான் வளர்ந்தேன். தவிர, பெண்களுக்குப் பேய் ஓட்டுபவர் பாடும்போது, அதிலும் ஒரு ராகம் இருக்கும். அதையும் ஆழ்ந்து கவனிப்பேன். நான் கேட்கிற இசையையெல்லாம் `ஹம்' செய்துகொண்டே இருப்பேன். இதெல்லாம் 25 வருஷங்களுக்கு முன்னால்... டி.வி, ரேடியோ என எங்களுக்கு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாத காலம். அப்படி ஒருநாள், பள்ளிக்கூட வாசலில் அமர்ந்து என் நண்பர்களுடன் தாளம்போட்டுப் பாடிக் கொண்டிருந்தேன். அப்போது என் குருநாதர் செல்லத் தங்கையா அங்கே வந்தார் (அப்போ என் குருநாதர், பிறகு என் அக்காவின் கணவர்). அவர் கல்லூரி மாணவர். நான் எட்டு வயதுப் பையன். அவர் கவிதைகள், பாடல்கள் எழுதுவதில் ஆர்வமானவர். எங்களைப் பொறுத்தவரை, அவர் பெரிய ஆள். அவரைப் பார்த்ததும் ஆளுக்கொரு பக்கமாக ஓடிவிட்டோம். எங்களை விரட்டிப் பிடித்து, `என்னடா பாடுறீங்க?' எனக் கேட்டு, அவர் முன்பு என்னைப் பாடச் சொன்னார். பாடினேன். `நல்லா பாடுற... நான் பாட்டு எழுதித் தர்றேன், அதைப் பாடு' என்று சொன்னவர், கொஞ்சம் கொஞ்சமாக என்னை வளர்த்தெடுத்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க