காந்தி 150

வரலாறு

காலத்தால் அந்நியப்படுவது என்பது அனைத்துத் தலைவர்களுக்கும் நிகழ்வதுதான். ஆபிரகாம் லிங்கனின் பங்களிப்புகள் தலைமுறைகள் கடந்து இன்றைய தலைமுறைக்கும் அச்சுப்பிசகாமல் சென்று சேர்ந்திருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. புத்தர் தொடங்கி பல வரலாற்று நாயகர்கள் காலப்போக்கில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். காந்தியும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தப் பின்னணியில் காந்தியின் 150-வது பிறந்தநாளை இன்றைய தலைமுறை எவ்வாறு நெருக்கத்துடன் அணுகுவது?

உலகமயமாக்கல் நடந்த பிறகு பிறந்த முதல் தலைமுறை இது. தாராளவாதத்தின் வெற்றிகளையும் சிறுமைகளையும் நேரடியாக நுகரும் இடத்தில் பரபரப்பாக இயங்கும் ஒரு தலைமுறைக்கு `காந்தி பத்தித் தெரிஞ்சு என்ன ஆகப்போகுது?’ என்ற கேள்வி எழுந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. ஆனால், அவர்கள் அரசியல்மயமாகவில்லை என்ற உண்மைதான் மிகவும் கவலையளிக்கக்கூடியது. காந்திக்கும் நம் வாழ்வுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. நம் இருப்பிற்கும் அமைதிக்கும் காந்தியின் தத்துவம் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறது. நம் போதாமைகளும் போராட்ட உளவியலும் காந்தியோடு பின்னிப் பிணைந்தவை. காந்தி, நல்லவரா கெட்டவரா என்ற கேள்வியை மாற்ற நாம் பழகிக்கொள்ள வேண்டும். அது தட்டையான கேள்வி மட்டுமல்ல, அதற்குச் சரியான பதிலும் இல்லை. மாறாக, காந்தி இன்று தேவைப்படுகிறாரா இல்லையா என்ற கேள்வியை இன்றைய தலைமுறை கேட்டுக்கொள்ள வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்