நாக்கைச் சுழற்றாதீர் - கவிதை | Poetry - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

நாக்கைச் சுழற்றாதீர் - கவிதை

லிபி ஆரண்யா, ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தபதி

குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்போம்
நல்லெண்ண வாசகந்தான்
குழந்தைகளை ஒழிப்போம்
என்றல்லவா பீதியூட்டுகிறது

ஊழலை ஒழிப்போம்
உத்தம வாக்கியந்தான்
ஜனநாயகத்தை ஒழிப்போம்
என்றல்லவா கிலியூட்டுகிறது

ஒரு கூவல்
வேறு கூவலாய்
மருவி விழுவது
எனது பிரச்னையா
இந்த நிலத்தின் பிரச்னையா

நீங்க எப்படி பீல் பண்றீங்க