தி.பரமேசுவரி கவிதைகள் | Poetry - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

தி.பரமேசுவரி கவிதைகள்

ஓவியங்கள்: ஹாசிப்கான்

இரவின் விளிம்பில்

எனக்காக ஒரு கவிதை என்கிறாய்
கனமானதொரு மழைத்துளி விழுகிறது
எனக்காக ஒரு கவிதை என்கிறாய்
எங்கோ ஒரு பறவை இசைத்துப் பறக்கிறது
எனக்காக ஒரு கவிதை என்கிறாய்
நிழல் பரப்பும் பெருமரங்கள் சற்றே அசைகிறது
எனக்காக ஒரு கவிதை என்கிறாய்
தாவும் அணிலொன்று நின்று பார்க்கிறது
எனக்காக ஒரு கவிதை என்கிறாய்
தண்ணொளிர் நிலவு உற்று நோக்குகிறது
எனக்காக ஒரு கவிதை என்கிறாய்
உற்றுநோக்குமிந்தக் கண்களின் சோகம்
மூடா இமைகளுக்குள் புரளும் கனவு
தீக்கொழுந்தாய்ப் படரும் தேகம்
கொல்லும் தனிமை
புரண்டு புரண்டழும் நினைவின் புழுதி
கடக்காது நிற்குமிந்த இரவின் விளிம்பு
வெறுமையின் சரிதல்
எல்லாம்
எல்லாம் திரட்டி எழுதுகிறேன்
உனக்காக ஒரு கவிதை

நீங்க எப்படி பீல் பண்றீங்க