ஞாலம் பேணும் நற்றாய் - கவிதை | Poetry - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

ஞாலம் பேணும் நற்றாய் - கவிதை

க்கரையூரில்
தலைவியை விட்டுப்பிரிந்தோன் எனினும்
திரும்பும் வழியில்
பெருகியோடும் ஆற்றைக் “காய்” என்று கூறான்.
வெள்ளம் வடியும்வரை
நிலவே துணையாகக் காத்திருப்பான்.
எம் வல்விதியோ பிழையோ
நீரோடாத ஆற்றை நெடுநாள்கள்
கண்டிருந்தோம்.
இன்றதன் கரையுடைக்கும்
நீர்ப்பெருக்கைக் காண்கையில்
கண்கள் போதவில்லை.
பாலத்தின்மீது நின்று பரவயப்பட்டபடி
வெள்ளப்புரள்வின் குழுக்குரலை
இப்போதுதான் கேட்கிறோம்.
ஆற்று வெள்ளம் என்பது
ஆயிரம் உயிர்ப்புகளின் கண்மலர்தல்.
வேர்நீர் தீண்டி உயிர்க்கும்
நூறு கால்வாய்களின் கரைப்பூக்கள்.
ஆற்று மணலடியில்
உதடு தொட்டு நீண்டிருக்கும்
நிலத்தடி நீர்க்கால்கள்.
ஆற்று நீர் வயல்கள்தாம்
எங்கோ தொலைவிலுள்ள
தானியக் கிடங்குகளை நிறைக்கும்.
அக்கிடங்கின் துருக்கதவுகள் முன்னே