அவரவர் கோகிலா - கவிதை | Poetry - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

அவரவர் கோகிலா - கவிதை

கோகிலாவைப் பார்த்ததிலிருந்து
என்று நான் எழுதிய கவிதையில்
என்னைத் தாண்டியும்
பிறர் கண்கள் துழாவின கோகிலாவை.
கோதுமை நிறமுடைய
குறுநகை இதழுடைய
இடை சிறுத்த
இளநீரை நிகர்த்த
இன்னும் இன்னும் வெவ்வேறாக
கோகிலா பார்க்கப்படுகிறாள்.
அனுமதி கோராமல் பார்ப்பதில்
குற்றமோ குறையோ
குதர்க்கமோ காமமோ இல்லை.
ஒரே ஒரு சந்தேகமுண்டு,
ஊரே அவளை
முன்னும் பின்னும் பார்க்க,
கோகிலா ஏன் யாரையுமே
பார்ப்பதில்லை?

நீங்க எப்படி பீல் பண்றீங்க