பெருவாழ்விற்கு மூன்று அல்லது நான்கு போதும் - கவிதை | Poetry - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

பெருவாழ்விற்கு மூன்று அல்லது நான்கு போதும் - கவிதை

நீள் புதிர்க் கவிதையொன்றில்
நான்கு வரிகளைக் கண்டடைந்தவனுக்கு
தாளாத மகிழ்ச்சி
‘யுரேகா! யுரேகா!’ எனக் கூவியபடி
தெருவில் ஓடுகிறான்

அவளே வாழ்வில்
மூன்றுமுறைதான் பார்த்திருந்த மச்சத்தை
அவன் தேடியடைந்த கணத்தில்
வெட்கத்தில் உடைந்து
மருக்கைக் குட்டியென
மடிமீது தலைசாய்த்தது
நான்கு நொடிகளுக்கும் குறைவே!

மூன்று மலர்களைத்தான்
முதலில் பூத்துத் தள்ளியது
இல்லாத வயிற்று வலியின் பொருட்டு
தூக்கிட்டு இறந்த
மகளின் சிறு கையால்
மண் அணைத்து வைக்கப்பட்ட செடி

நீங்க எப்படி பீல் பண்றீங்க