நினைவுதிர் காலம் - கவிதை | poetry - Vikatan Diwali malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

நினைவுதிர் காலம் - கவிதை

சக்தி ஜோதி - ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி

ரு பருவத்தில் துளிர்த்து
மறு பருவத்தில்
மலர்ந்து குலுங்கி
வேறு பருவத்தில் உதிர்ந்த பிறகும்
இன்னுமொரு பூப்பிற்கான
ஈரத்தைத் தனது
வேரடி மண்ணில்
தேக்கி வைத்திருக்கிற
தாவரத்தின் நினைவில்
தலைகீழாகப் பூத்து நிற்கிறதுதொரு
காடு
அங்கு ஒருபோதும்
மண்ணில் இலைகளும்
மலரிலிருந்து இதழ்களும்
உதிர்வதேயில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க