அமர முனிவன்! - அகத்திய மாமுனிவர் தொன்மங்களும் தொடர்ச்சியும்

ஆன்மிகம்அ.கா.பெருமாள்

தாடகையைச் சபித்தவர்; வாதாபி வில்வலனை அழித்தவர்; கடலைக் குடித்து உமிழ்ந்தவர்; லோபாமுத்திரை என்ற பெண்ணை மணந்தவர்;  பரசுராமனை எதிர்த்தவர்; ராவணனை யாழ்ப் போட்டியில் வென்றவர்; உலகைச் சமன் செய்யத் தென்னகம் வந்தவர்; காவிரி, பொருநை நதிகளைத் தந்தவர் - இவைதாம் அகத்தியர் குறித்துப் பெரும்பாலானோர் அறிந்த தகவல்கள்.

இவை மட்டுமன்றி அகத்தியர் குறித்த தொன்மங்கள், தொடர்ச்சி பற்றிய தகவல்கள் இன்னும் பல உண்டு. தெரிந்துகொள்வோமா?

அகத்தியர் குறித்து ஆரம்பகாலத்தில் ஆராய்ந்தவர்கள் ‘அகத்தியர்’ என்பதற்கு `உள்ளொளி பெருக்குதல்’ என்று பொருள் கொண்டனர். பண்டைய இலக்கியங்கள்வழி சேகரித்த செய்திகளின்மூலம் இது உருவாக்கப்
பட்டது. தமிழ் உயிரெழுத்தில் முதலில் இருப்பது ‘அ’; மெய்யெழுத்தில் கடைசியில் இருப்பது ‘ன்’ அகத்தியன் எனும் பெயரிலும் `அ’ முதலிலும் `ன்’ இறுதியிலும் உள்ளன. இது தமிழின் அடையாளம் என உருவகிக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்