இஸங்களின் வழியே..!

கலைநாகராஜகுமார்

வீன ஓவியக் கலையில் பல ‘இஸங்கள்’ பற்றி சொல்லப்படுகின்றன. இம்ப்ரஷனிஸம் (Impressionism), எக்ஸ்பிரஷனிஸம் (Expressionism), சர்ரியஸிஸம் (Surrealism), க்யூபிஸம் (Cubism), டாடாயிஸம் (Dadaism), அப்ஸ்ட்ராக்ட் (Abstract) என்பவை அவற்றுள் சில. இவற்றில் தமிழகத்தில் சர்ரியலிஸம் சார்ந்த பல ஓவியங்களைப் படைத்து வருகிறார் சங்கர் லீ.

 ‘சர்ரியலிஸம்’ என்றால் என்ன?

 “ ‘சர்ரியலிஸம்’ என்பது உண்மைத் தோற்றத்தை அப்படியே பிரதிபலிக்காமல் தமது கற்பனைக்கு கருத்துருவுக்கு ஏற்றவாறு மாற்றியோ அல்லது சிலவற்றைப் புறந்தள்ளிவிட்டோ, மாயத்தோற்றங்களை, மாய பிம்பங்களை, நம்ப முடியாத விஷயங்களை விளக்குமாறு காட்சிப்படுத்துதல் என்று சொல்லலாம். உதாரணத்திற்கு ஓவியர் சல்வடோர் டாலியின் ஓவியங்களை எடுத்துக்கொள்வோம். அவருடைய ஓர் ஓவியத்தில் யானை ஒன்று ஆகாயத்தைத் தொடும் அளவுக்கு உயரத்துடன் இருக்கும். அதன் உடல் ஆகாயத்தில் இருந்தாலும் அதனுடைய கால்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிறுத்து இறுதியில் பூமியில் பதியும்போது, பூச்சிகளின் கால்களைப்போல் தோற்றமளிக்கும். இந்த விசித்திரமான, மாயத்தோற்றத்தைக் காணும்போது நமக்கு வியப்பையும் மாறுபட்ட எண்ணங்களையும் தோற்றுவிக்கும். இன்னோர் ஓவியத்தில், காலங்கள் கடந்து செல்வதை உணர்த்தும் விதமாகக் கடிகாரங்கள் உருகி வழிவதைப்போல வரைந்திருப்பார். சில ஓவியங்களில், ஒரே ஓவியத்தில் பல உருவங்கள் மறைமுகமாகத் தெரிவதைப்போல் வரைந்திருப்பார். இந்த உத்தியைப் பயன்படுத்தி ஐரோப்பிய ஓவியர்கள் பலர் பல ஓவியங்களைப் படைத்திருக்கின்றனர். நானும் இந்த உத்தியைப் பயன்படுத்தி பல ஓவியங்களைப் படைத்திருக்கிறேன். தற்போது வரை 32 ஓவியங்களைப் படைத்திருக்கிறேன். ஐரோப்பியர்கள் இவ்வகையான ஓவியங்களை சர்ரியலிஸம் என்று பெயரிட்டு அழைத்தாலும் நான், DMF (Disguised Multiple Figures) Paintings (மறைபடு பல்லுருவ ஓவியங்கள்) என்று பெயரிட்டிருக்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்