சரவணபெலகுலா... பரவசமூட்டும் பாகுபலி! | Shravanabelagola - Vikatan Diwali malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

சரவணபெலகுலா... பரவசமூட்டும் பாகுபலி!

ஆன்மிகம்

ர்நாடக மாநிலம் செல்லும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் காட்சி தருகிறது, சரவணபெலகுலாவில் உள்ள மிகப் பிரமாண்டமான கோமதேஸ்வரா சிலை. 57 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்தச் சிலை, கங்கர்கள் ஆட்சியில் மகா மந்திரியாக இருந்த சாவுண்டராயா என்பவரால், கி.பி. 978 முதல் 981 வரையுள்ள காலகட்டத்தில் நிர்மாணிக்கப் பட்டது. சுமார் 25 கி.மீ. தொலைவில் இருந்து பார்க்கும் வண்ணம் விந்தியகிரி மலையில் அமைக்கப்பட்டிருக்கும் கோமதேஸ்வரா சிலையை பாகுபலி என்றும் அழைக்கின்றனர்.