ராஜ மாதா - சிறுகதை | Short Story - Vikatan Diwali malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

ராஜ மாதா - சிறுகதை

சோ.தர்மன், ஓவியங்கள் : ஸ்யாம்

ண்முகம் தம்பி வந்திருப்பதாக மனைவி சொன்னாள்.  சண்முகத்தின் அக்காளைத்தான் நான் மணம் முடித்திருக்கிறேன். அவன் முகம் பார்க்கவே சகிக்காதபடி குராவிப் போயிருந்தது. இது மாதிரியான சோகத்தை நான் அவன் முகத்தில் பார்த்ததே இல்லை. போன வாரம் தான் நானும் என் மனைவியும் அவன் வீட்டுக்குப் போய்விட்டு வந்தோம். என்னைச் சந்திக்க வர வேண்டிய முக்கிய வேலைகள் ஏதுமில்லை. மகளுக்குக் கல்யாண ஏற்பாடுகள்வேறு செய்து கொண்டிருந்தான். மதுரை மாப்பிள்ளை ரொம்பத் திருப்தியென்றும், அதையே பேசி முடித்துவிடலாமென்றும் சொல்லிவிட்டு வந்திருந்தேன். சண்முகம் முகம் பேயறைந்தது மாதிரி இறுகிப்போயிருந்தது. ``என்ன சண்முகம், என்ன விஷயம், எதுக்கு இப்படி டல்லா இருக்க? ``...”

``சொல்லுப்பா என்ன தயக்கம், நானும் ஒன்னோட அக்காவும்தான இருக்கோம், எதுனாலும் தாராளமாச் சொல்லு, கல்யாண ஏற்பாடெல்லாம் நடக்குதில்ல?’’

``நடக்கு மச்சான், ஆனா அந்த மாப்பிள்ள வேணாமாம், அதுக்குமேல என்னத்தச் சொல்ல, அவகிட்ட ஒரு வார்த்தை கேக்காம நம்ம சரினு சொன்னது தப்பா போச்சு.”

``அவகிட்ட என்ன நம்ம கேக்கிறது, குத்துக்கல்லக் காட்டி, கழுத்த நீட்டுனு சொன்னா நீட்டணும், அப்படித்தானே வளர்த்து வச்சிருக்கோம், சரி, இந்த மாப்பிள்ளை வேணாம், வேற எந்த மாப்பிள்ளை வேணுமாம்.”

``அத நீங்களே வந்து கேளுங்க, மாமாகிட்டயும் அத்தை கிட்டயும் என்ன சொல்றானு பாப்பம்.”

``உன்கிட்ட என்ன சொன்னா.”

``என்கிட்ட இந்த மாப்பிள்ளை வேணாம்னு மட்டும் தான் சொல்றா, கல்யாணம் வேண்டாமினு சொல்லல” நானும் என் மனைவியும் வீட்டுக்குள் நுழைந்தபோது என்றைக்கும்போல் சங்கரம்மாதான் வரவேற்றாள்.
``வாங்க மாமா, அத்தை வாங்க.”

எதுவுமே நடக்காதது மாதிரி என்றைக்கும்போல் இயல்பாக இருந்தாள் சங்கரம்மாள். சண்முகமும் அவன் பெண்டாட்டியும்தான் தலப்புள்ள சாகக் கொடுத்தவர்கள் மாதிரி முகங்குராவி உட்கார்ந்திருந்தார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க