சோம்பேறி பூதம்! - சிறுவர் கதை | Kids story - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

சோம்பேறி பூதம்! - சிறுவர் கதை

ரு ஊர்ல ஒரு பூதம் இருந்துச்சாம். அது சரியான சோம்பேறி. வேலை செய்யறதுன்னாலே கசக்கும். ஆனா, ரெண்டு வயித்துக்குத் தின்பதுபோல அவ்வளவு சாப்பிடும். அப்பவும் பசிச்சுக்கிட்டே இருக்குமாம். அதனால், ஒரு விவசாயிகிட்ட சாப்பாடு கேட்டுச்சு. அவரோ, `ஏதாச்சும் வேலை செஞ்சாதான் சாப்பாடு'னு சொல்லிட்டார். பூதமும் வேலைகளைச் செய்துகொடுத்து, சாப்பாடு சாப்பிட்டுச்சு. ஒருநாள், அதிமாக வேலைசெய்ய அலுத்துக்கிட்டு, மறைவான இடத்துல படுத்துத் தூங்கிடுச்சு. பூதத்தின் கால், அங்கேயிருந்த எலி வீட்டை மறைச்சுட்டு இருந்துச்சு. சாயந்தரம் திரும்பிய எலி, வீட்டுக்கு வழி தெரியாம முழிச்சது. அப்பறம்தான், இந்தப் பூதத்தின் காலைத் தூக்கினால்தான் நம்ம வீட்டுக்குப் போகமுடியும்னு தெரியவந்துச்சு. பூதத்தை எழுப்பி, `காலை மட்டும் நகர்த்திக்கோ'னு பணிவாகக் கேட்டுச்சு. `அதெல்லாம் முடியாது'னு பூதம் மறுபடியும் தூங்கிடுச்சு.