வேட்டை ராஜா - சிறுவர் கதை | Kids story - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

வேட்டை ராஜா - சிறுவர் கதை

ல்லா ராஜாக்கள்போலவே, இந்த ராஜாவுக்கும் வேட்டை ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொரு பௌர்ணமிக்கும் வேட்டைக்குச் செல்வார். அன்றைக்கு, வேட்டைக்காகக் காட்டுக்குள் வந்து நாளே முடியப்போகிறது. ஒரு விலங்கும் கண்ணில் படவில்லை. வெறுங்கையுடன் திரும்பினால், பெரிய அவமானமாகப் போய்விடும் எனத் தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு மரத்தின் பின்னால் ஏதோ சத்தம் வந்தது. காவலாளிகள் சூழ அங்கே சென்றார் ராஜா. அங்கே சின்ன முயல் ஒன்று, கண்களில் பயத்துடன் நின்றிருந்தது. இனி தப்பிக்க முடியாது என நினைத்த முயல், ``என்னைக் கொல்லாமல் விட்டுவிடுங்கள் ராஜா'’ என முன்னங்கால்களைத் தூக்கிக் கெஞ்சியது. பேசும் முயலைப் பார்த்து அதிசயித்தார் ராஜா. அதைக் கொல்லாமல், தன் தோளில் உட்காரச் செய்தார். ``தப்பிக்க முயன்றால் கொன்றுவிடுவேன்'’ என மிரட்டினார்.