எவர் பொருட்டு?! - சிறுகதை | Short Story - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

எவர் பொருட்டு?! - சிறுகதை

துரை ரயில் நிலையத்தின் உள்ளே நுழையும்போது, வெக்கை தாளாமல் உடலில் வியர்த்துக்கொட்டியது. கண்ணெதிரே செங்கோட்டை லோக்கல் நிற்பதைப் பார்த்ததும் சின்ன ஆறுதல் வந்தது. டிக்கெட் கவுன்டரில் கூட்டம் குவிந்திருக்க... பதினேழாவதாகவோ, இருபத்து மூன்றாவதாகவோ போய் வரிசையில் நின்றேன். அனிச்சையாக என் கண் மொபைலைப் பார்த்தது.

‘`இன்னும் அரைமணி நேரம் இருக்கு ரயில எடுக்க… அதுக்குள்ள டிக்கெட் வாங்கிரலாம்’' என்றார், எனக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த பாட்டையா. இது அவர் எனக்குச் சொன்ன சமாதானமா, இல்லை அவருக்கே சொல்லிக் கொண்டதா என்று தெரியவில்லை.

என்னிடம் இருந்த போனைக் கொஞ்சம் விநோதமாகப் பார்த்தார். `‘இது போனா..?'’ என்றார்.

‘`ஆமா பாட்டையா… இங்கன நிக்கயிலயே யார்ட்டனாலும் பேசலாம்… வீட்டுல இருக்கும்லா கறுப்பு கலர்ல, அது கணக்கா…’' என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ‘அப்படிப் போடு போடு…’ என்று ரிங் டோன் ஒலித்தது. பாட்டையா பக்காப்படிக்கு முக்காப்படி கொள்ளும் சட்டைப் பைக்குள் கையைவிட்டுத் துழாவி, ஒரு மொபைலை எடுத்தார். என்னைப் பார்த்துக்கொண்டே அதன் பச்சை பட்டனை அழுத்தினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க