வானத்துடன் டூ - சிறுவர் கதை | Kids story - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

வானத்துடன் டூ - சிறுவர் கதை

பெரீய்ய்ய்ய குளத்தின் கரையில் துர்கா நிற்கிறாள். குளத்தைச் சுற்றிலும் மரங்கள். நான்கு படித்துறைகளும் உண்டு. மாடுகளைக் குளிப்பாட்டுவதற்கு அழைத்துவர, மேற்கு மூலையில் ஒரு வழியும் இருக்கிறது. ஆனால், தண்ணீர்தான் இல்லை.

குளத்தைச் சுற்றிச்செல்வதைவிட, இறங்கிச்சென்றால் எதிர்ப்புறத்துக்குச் சீக்கிரம் சென்றுவிடலாம் என்பதால், இறங்கி நடந்தாள். குளத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவளுடன் ஆறாம் வகுப்பு படிக்கும் நடேஷ், விக்கெட் கீப்பர். ஊரைத் தாண்டியிருக்கும் அரசமரத்துக்கு அருகிலுள்ள பம்பில் தண்ணீர் பிடித்துவர கையில் பிளாஸ்டிக் குடம் வைத்திருந்தாள் துர்கா. இன்னொரு கையிலிருந்த புளியம்பழத்தைச் சப்பிக்கொண்டே வேகமாக நடந்தாள்.