''நேரம் கிடைக்கும்போது எல்லாம் நீச்சல்!''

அமலாபால் அழகு ரகசியம்

பால் மட்டுமே குடித்து வளர்ந்த பறவைபோல் இருக்கிறார் அமலா பால். பால்யம் மாறாத சிரிப்பும் சிறு உதட்டுச் சுழிப்புமாக நெஞ்சுக்குள் தடதட கிளப்பியவரிடம் ஃபிட்னெஸ் ரகசியம் கேட்டேன்.

கலகலவெனச் சிரித்தார். ''இதுதான் என் பதில். எப்பவுமே சிரிச்ச முகமா இருக்கணும். அழகும் ஆரோக்கியமும் மனசு சம்பந்தப்பட்டது. நல்ல சாப்பாடு, தீவிரப் பயிற்சின்னு இருந்தாலும், மனசுல மகிழ்ச்சி இல்லைன்னா, உடம்பு கன்ட்ரோலை இழந்துடும். எங்க அப்பா சின்ன வயசுலயே கத்துக்கொடுத்த அழகு டிப்ஸ் இது. அவரோட கையைப் பிடிச்சுக்கிட்டு ஜாக்கிங் போறப்ப, ஹெல்த் சம்பந்தமான விஷயங்கள் நிறையச் சொல்வார். ஆரம்பத்தில் நான் சரியான முன்கோபி. சின்ன ஏமாற்றத்தைக்கூடத் தாங்கிக்க முடியாமல் டென்ஷனாகிடுவேன். அது அப்படியே முகத்தில் பிரதிபலிக்கும். 'எல்லாம் சில காலம்தான்’னு அப்பா சொன்ன வார்த்தைகளோட ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். இப்போ, வானமே கீழே விழுந்தாலும் 'ஹைய்யா... ஜாலி!’ன்னு கத்துற அளவுக்கு கூல் கேர்ள்!'' - மறுபடியும் சிரிக்கிறார் குறும்பாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்