டீன்

டோண்ட் 'கிக்' ஸ்டார்ட்!

''ன் அருமை மகனின் பதினெட்டாவது பிறந்தநாள் அன்று. வீட்டில் கேக் வெட்டிக் கொண்டாடியவன், 'ஃப்ரெண்ட்ஸெல்லாம் ட்ரீட் கேட்டிருக்காங்கம்மா. பக்கத்துல இருக்கற ரெஸ்ட்டாரன்ட் வரைக்கும் போய்ட்டு வந்துடறேன்’ என்று அவனது அப்பா பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான். பக்கத்தில்தானே இருக்கிறது ரெஸ்ட்டாரன்ட் என்பதால், ஹெல்மெட் போடவில்லை. அவன் சென்ற இரண்டு மணி நேரத்தில் அவனது செல்போனிலிருந்து அழைப்பு வந்தது. எடுத்ததும், யாரோ ஒருவர் 'எதிரே வந்த மினி வேன் மீது உங்கள் மகனின் பைக் மோதிவிட்டது. தாம்பரத்திலிருந்து முடிச்சூர் செல்லும் வழியில் இருந்து பேசுகிறேன். உடனடியாக வாருங்கள்’ என்றது

அந்தக் குரல். தாங்க முடியாத துக்கத்தை அடக்கிக் கொண்டு, உடனடியாக ஆட்டோவில் விரைந்தோம். அங்குள்ள கால்வாய்க்கு அருகில், என் மகனும், அவனது நண்பனும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றோம். ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு அதிகமாக இருந்ததால், உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். என் கண் முன்பே என் அன்பு மகனின் உயிர் பிரியும் கொடுமையை எப்படிச் சொல்வேன். பதினெட்டாவது பிறந்தநாளே அவனது இறுதி நாளாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லையே!'' என்று கதறி அழும் பார்வதிக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை!

 ''போதையில் வாகனம் ஓட்டுவது என்பதே ஒரு தற்கொலை முயற்சிதான்!''  என்று எச்சரிக்கிறார் அப்பல்லோ மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த் ராமமூர்த்தி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்