இடி மேல் இடி!

பாடம் தந்த ஏழாங்கல்லு!சார்லஸ், அ.லெனின்ஷா, படங்கள் : கே.கார்த்திகேயன்

ம்மைச் சுற்றி தினம் தினம் விபத்துகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. 'நான்கு பேர் பலி, காரில் பயணம் செய்த ஐந்து பேரும் பலி’ என்கிற செய்தியோடு, அதை நாம் கடந்து விடுகிறோம். நமக்கு விபத்து ஏற்பட்டால்தான் விபத்தின் கொடூரத்தையும், அதன் வலியையும் உணர முடிகிறது'' என்கிறார் மிகவும் மோசமான விபத்தில் இருந்து உயிர் பிழைத்து வந்திருக்கும் கே.எம்.வந்தன்.

''காரில் குடும்பத்தோடு டூர் அடிப்பதுதான் என்னுடைய ஒரே பொழுதுபோக்கு. இரண்டு நாள் லீவு கிடைத்தால் போதும், காரில் ஏறி குடும்பத்துடன் டூர் கிளம்பி விடுவேன். இதுவரை 48 ஆயிரம் கி.மீ தூரம் காரிலேயே பயணம் செய்திருக்கிறேன். என்னுடைய 25-வது பெரிய டூர், வாழ்க்கையில் மறக்க முடியாத பாடத்தைக் கற்றுக் கொடுத்து விட்டது. சென்னையில் இருந்து கேரள மாநிலம் திருச்சூருக்குப் போய்விட்டு, அங்கிருந்து தேக்கடிக்குப் போய்க் கொண்டு இருந்தோம். அன்று ஈஸ்டர் ஞாயிறு. மாருதி ஸ்விஃப்ட்டை நான் ஓட்ட, என் மனைவி லக்ஷ்மி முன் இருக்கையில் மகள் தேஜஸ்வினியுடன் அமர்ந்திருந்தாள். பின் இருக்கையில் என் அம்மாவும், என்னுடைய அக்காவுடன் அவரது இரண்டு மகன்களும் அமர்ந்திருந்தனர். காலை ஏழு மணி இருக்கும். பேராமங்கலம் எனும் பகுதியில் ஏழாங்கல்லு என்ற இடத்தில், எங்களுக்கு எதிரே பயங்கர வேகத்தில் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பொதுவாகவே, கேரளாவில் மிக வேகமாக பஸ் ஓட்டுவார்கள். அதனால், நான் எப்போதுமே கூடுதல் கவனத்துடன் கார் ஓட்டுவேன். ஆனால், பஸ் இடது பக்கமாக வராமல் வலது பக்கமாக எனக்கு நேர் எதிரே வர... நான் சாலையை விட்டு காரைக் கீழே இறக்கி விட்டேன். இந்த நேரத்தில் பஸ்ஸுக்குப் பின்னால் இருந்து பஸ்ஸை ஓவர்டேக் செய்து கொண்டு ஸ்விஃப்ட் ஒன்று பறந்து வர... நான் காரை இன்னும் இடது பக்கமாகத் திருப்ப... ஸ்விஃப்ட் என் காரில் முட்டிய வேகத்தில், என்னுடைய கார் சாலையை நோக்கித் திரும்பியது. சில விநாடிகளில், ஸ்விஃப்ட்டுக்குப் பின்னால் இருந்து பயங்கர வேகத்தில் இனோவா ஒன்று வந்தது. இனோவாவும் என்னுடைய காரும் நேருக்கு நேர் மோதவும் பயங்கர விபத்து ஏற்பட்டுவிட்டதை உணர்ந்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்