''நாம சொல்றதை நம்ம உடம்பு கேட்கணும்!''

பேஸ்கட் பால் பேபி அட்வைஸ்இரா.சரவணன்

 
'கன்னித் தீவுப் பெண்ணா... கட்டழகுக் கண்ணா’- நீத்து சந்திராவை நேரில் பார்த்துவிட்டு கவிஞர் ஃபீல் செய்து இருப்பார்போல... நேரில் பார்த்தால் நமக்கும் அதே! ரப்பருக்குச் சேலை கட்டியதுபோல வளைந்து நெளிந்து 'யுத்தம் செய்’ படத்தில் அமீரோடு ஆட்டம்போட்ட நீத்து சந்திரா, பீகார் மாநில பேஸ்கட் பால் சாம்பியன். டேக்வான்டோவில் பிளாக் பெல்ட்.  

 ''சின்ன வயசுல இருந்தே உடம்பை கேர் எடுத்துப் பார்த்துக்கணும்னு ரொம்ப அக்கறையா இருப்பேன். சொன்னா நம்ப மாட்டீங்க... நினைச்சா, சில நாட்களிலேயே வெயிட் ஏத்திக்கவும், அடுத்த சில நாட்களிலேயே வெயிட்குறைக்கவும் என்னால் முடியும். 'யுத்தம் செய்’ பாட்டுக்குக் கொஞ்சம் சதை போட்டா நல்லா இருக்கும்னு தோணுச்சு. நாலே நாள்ல மூணு கிலோ வெயிட் போட்டேன். இப்போ 'ஆதிபகவன்’ படத்துல முன்னைவிட ஸ்லிம்மா நடிக்கிறேன். சரியான உணவையும், முறையான பயிற்சிகளையும் கடைபிடிச்சா நாம சொல்றதை நம்ம உடம்பு கேட்கும்!'' - ஆச்சர்யம் விதைத்து அடக்கமாகச் சிரிக்கும் நீத்து, யோகா பயிற்சிகள் அத்தனையையும் ஆகக் கற்றவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்