தையல் வேண்டாம் 'மை'யல் போதும்...

கண் சிகிச்சையில் புதிய டெக்னிக்..

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள திருமதுரையைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. அவர் மகள் ஆனந்தி நான்கு வயதாக இருந்த நேரத்தில், பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு சிறுவன் வைத்த வெடி சிதறிவந்து ஆனந்தியின் கண்ணில் படவே, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  கண்ணில் படுகாயம் ஏற்பட்ட காரணத்தால், ஆனந்தியின் வலது கண் பார்வை பறிபோய்விட்டதாக டாக்டர்கள் கூறினர். 

'ஆனந்தியின் கதி அவ்வளவுதானா’ என்று நினைத்து மனவருத்தம் அடைந்து முடங்கிப் போகாத அவளது பெற்றோர்,  சென்னையில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனைக்குக் கொண்டுவந்தனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர் அமர் அகர்வால் தலைமையிலான மருத்துவக் குழுவினர், கருவிழியில் உள்ள லென்ஸில் பாதிப்பு இருப்பதை கண்டறிந்து, க்ளூட் ஐ.ஓ.எல். அறுவைசிகிச்சை செய்தது. ஆனந்திக்கு மீண்டும் பார்வை கிடைத்துவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்