ஆறு மாதக் குழந்தைக்கு அதிரடி சிகிச்சை!

உயிர் பிழைத்த ஸ்மரா

தய அறுவை சிகிச்சை என்றாலே சிக்கல் நிறைந்ததுதான். அதுவே ஒரு கைக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால்... அதிலும் அந்த குட்டி இதயத்துக்குள் நான்கைந்து பிரச்னைகள் இருந்தால் என்ன ஆகும்? ஈராக் நாட்டைச் சேர்ந்த ஸமரா என்ற குழந்தைக்கு அப்படித்தான் பிரச்னைகள் இருந்தன. அந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து, உயிரைக் காப்பாற்றி சாதனை படைத்து உள்ளனர் சென்னை மருத்துவர்கள். 

இது குறித்து சென்னை, பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை தலைமை இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் என்.மதுசங்கர் பேசுகிறார். ''கடந்த மாதம் ஈராக் நாட்டைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர் ஒருவர், அவரது பெண் குழந்தை ஸமராவை இங்கே கொண்டுவந்தார். பிறந்ததில் இருந்து அந்தக் குழந்தை நீல நிறத்தில் இருந்துள்ளது. கார்பன் டை ஆக்ஸைட் அதிகம் கலந்த கெட்ட ரத்தம் ஓடிய காரணத்தால்தான், அந்தக் குழந்தை நீல நிறமாக இருப்பது தெரிய வந்தது. குழந்தையின் தாயாருக்கு முதுகுத்தண்டில் பிரச்னை இருந்த காரணத்தால், அவர் ஈராக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த இக்கட்டான நிலையில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மனைவியை அங்கே விட்டுவிட்டு, ஸமராவை சென்னைக்குக் கொண்டுவந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்