ஆல் இன் ஆல் ஆலிவ் ஆயில்!

''நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம். சருமத்தைப் பொலிவாக்கி, இளமையைக் காக்கும் மகிமை ஆலிவ் எண்ணெய்க்கு உண்டு. புற்றுநோயைத்  தடுக்கும் வல்லமைகொண்டது என்பதால், ஐரோப்பியர்கள் அன்றாட உணவில் அதிக அளவு ஆலிவ் எண்ணெயைச் சேர்த்துக்கொள்கிறார்கள். நம் ஊர் அளவுக்கு அவர்களுக்கு இதய நோய் பரவலாக இல்லாமல் இருப்பதற்கும் ஆலிவ் ஆயிலே காரணம்'' - ஆலிவ் எண்ணெயின் பெருமையை விரிவாகப் பேசுகிறார் இதய சிகிச்சை நிபுணரான டாக்டர் கீதா சுப்ரமணியன். 

''பச்சை நிற ஆலிவ் காய்களில் இருந்து பச்சை நிற எண்ணெயும் சற்றுப் பழுத்தப் பழங்களில் இருந்து மஞ்சள் நிற எண்ணெயும் எடுக்கப்படுகிறது. ஆலிவ் எண்ணெயின் தனித்தன்மையே அதன் நறுமணமும், வித்தியாசமான சுவையும்தான். நல்ல கொழுப்பு அடங்கிய இந்த எண்ணெயானது நீண்ட நாட்கள் கெட்டுப்போகாது என்பது கூடுதல் சிறப்பு. 'ஒமேகா 3’ மற்றும் 'ஒமேகா 6’ ஆகிய நல்ல கொழுப்புகள் ஆலிவ் எண்ணெயில் 8:1 என்ற விகிதத்தில் இருப்பதால், இதயத்தைப் பாதுகாக்கிறது. இதனால்தான் உலகிலேயே மிகவும் ஆரோக்கியம் தரும் எண்ணெயாக ஆலிவ் எண்ணெய் கருதப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்