மின்வெட்டு... உடலையும் பாதிக்கும்!

மின் வெட்டால் இயந்திரங்களை நம்பி உள்ள தொழிற்சாலைகளின் உற்பத்தி மட்டுமே பாதிக்கப்படுவது இல்லை. இயந்திரத்தனமாக மாறிப்போன மனிதனுடைய ஆரோக்கியமும் பதம் பார்க்கப்படுகிறது. வேலைப் பளுவைக் குறைக்க, நேரத்தை மிச்சப்படுத்த, பொருட்களைக் கெடாமல் பாதுகாக்க உருவாக்கப்பட்ட மின் சாதனங்களே, அடிக்கடி ஏற்படும் மின் வெட்டால் உடல் நலனைக் கெடுத்துவிடும் அபாயம் இப்போது. இதில் முதல் இடத்தில் இருப்பது ரெஃப்ரிஜிரேட்டர். மின் வெட்டால் ஏற்படும் பாதிப்புகள்- அவற்றில் இருந்து நம் உடல் நலனைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள்குறித்து  வழிகாட்டுகிறார் டயட்டீஷியன் நளினி. 

''உணவுப் பொருள் பாதுகாப்பில் குளிர்சாதனப்பெட்டியின் வெப்ப நிலை நான்கு டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அப்படி, வெப்ப நிலை அதிகரிக்கும்போது எளிதில் கெட்டுப்போகக்கூடிய பொருட்களைப் பாதுகாப்பதுக் கடினம். மின் வெட்டு சமயங்களில் இரண்டு மணி நேரம் வரை ரெஃப்ரிஜிரேட்டரின் வெப்ப நிலை நான்கு டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் குளிர்நிலையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். தற்போது வெயில் காலம் ஆரம்பித்துவிட்டதால் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகள் பல்கிப் பெருகும். நாளின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து வைத்திருக்கும் மின் வெட்டுப் பிரச்னையின்போது தவிர்க்க வேண்டிய சில வழிமுறைகளையும் சொல்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்