மின்சாரம் தாக்கினால்..?

தடையே முதல் உதவி

மையல் அறையில் ஆரம்பித்து குளியல் அறை வரையிலும் மின்சாரத்தில் இயங்கும் வீட்டு உபயோகப் பொருட்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. மின்சார விபத்துச் சூழல்களைத் தவிர்ப்பது குறித்தும் முதல் உதவிச் சிகிச்சை முறைகள் குறித்தும் விரிவாகப் பேசுகிறார் குழந்தைகள் நல மருத்துவர் ராமச்சந்திரன். 

''பொதுவாக விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும்போது சமயோசிதப் புத்தியோடு மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டும். மின்சாரத்தின் தாக்கம் எத்தனை அளவு (வோல்ட்) என்பதைப் பொருத்தும் உடலில் மின்சாரம் பாயும் பாதையின் மின் தடைத் திறனைப் பொறுத்தும் ஆபத்தின் அளவுகள் இருக்கும். குளியல் அறை, சமையல் அறை போன்ற ஈரமான சூழலில் உடல் மீது மின்சாரம் பாய நேர்ந்தால், தொடர்ந்து தடைபடாமல் மின்சாரம் பாய்வதால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். உயர் அழுத்த மின் கம்பிகளைத் தவறுதலாகத் தொடும்போது நம் உடலுக்குள் பாய்கின்ற மின்சாரமானது, சட்டென உடல் முழுவதும் பரவி பூமிக்குள் இறங்கிவிடும். இந்த வகையில், நம் உடலையும் ஒரு மின் கடத்தியாகவே மாற்றிவிடுகிறது மின்சாரம். உடலில் மின்சாரம் பாயும் இடத்திலும் வெளியேறும் இடத்திலும் தோலின் வெளிப்புறம் தீக்காயங்கள் ஏற்படும். ஆனால், உடலைக் கடந்து செல்லும் மின்சாரம் உள் உறுப்புகளையும் பாதிக்கும். இதனால்தான், மின் அதிர்வுக்கு ஆளானவர்களின் இதயத் துடிப்பு தடைபட்டு உயிர் இழக்க நேரிடுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்