மார்பகத்தில் வலி... மனதுக்குள் ஒளி!

புற்றுநோயை வென்ற புதுமைப்பெண்!

''திருப்பதி கடவுளிடம் எல்லோரும் முடியைக் காணிக்கைத் தருவதாகத்தானே வேண்டிக்கொள்வார்கள்? ஆனால், நான் மட்டும் தயவுசெய்து என் முடியை எடுத்துவிடாதே தெய்வமே என்று கண்ணீர்விட்டு வேண்டி நின்றேன். வாழ்ந்துக்காட்ட வேண்டும் என்கிற வைராக்கியமும் வாழ்க்கையின் மீதான அதீதக் காதலும்தான் காரணம். அதுதான் ஐந்து வருடங்களைத் தாண்டியும் புற்றுநோயோடு நான் போராடி ஜெயிக்கக் காரணம்!'' - சத்தம் இல்லாமல் தன்னை நோக்கி நடந்துவந்த இருட்டை, மௌனமாகத் துடைத்துவிட்டப் பெருமிதத்தில் நம்மோடு பேச ஆரம்பிக்கிறார் 66 வயதான பிரேமா பாலன். 2006-ல் மார்பகப் புற்றுநோயால் தாக்கப்பட்டு, அறுவைசிகிச்சை செய்துகொண்டவர். 

''எனக்கு ஒரு பையன்; ஒரு பொண்ணு. ரெண்டு பேருக்கும் திருமணம் முடிஞ்சு, பேரப் பிள்ளைகள்கூட இருக்காங்க. 22 வருடங்களுக்கு முன்பு என் கணவர் மாரடைப்பு வந்து இறந்துவிட்டார். 10-ம் வகுப்பு வரையிலும்தான் எனக்குப் படிப்பு. வங்கிக்குச் சென்று பணம்கூட எடுக்கத் தெரியாது. ஆனால், கணவரின் மறைவுக்குப் பிறகு வெளியுலக அனுபவங்கள் ஒவ்வொன்றிலும் தன்னந்தனி ஆளாக தட்டுத்தடுமாறி நான் எதிர்கொண்ட சம்பவங்கள்தான் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் துணிச்சலையும் தன்னம்பிக்கையும் வேர்விடச் செய்தன'' - கடந்துவந்த கரடுமுரடானப் பாதையைக் கண்களில் ஈரம் கசிய நினைவுகூர்கிறார் பிரேமா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்