விரட்ட முடியாத வியாதி அல்ல 'வெர்ட்டிகோ'!

''அஞ்சு வருஷங்களுக்கு முன்னால் திடீர்னு ஒரு நாள் என் தலைக்குள்ளே வேகமா ஏதோ சுத்துற மாதிரி இருந்தது. உடம்பு முழுக்க குப்புனு வியர்வையாகி, நடக்க முடியாமல் கால் தடுமாறி அப்படியே சாய்ஞ்சுட்டேன். சோதிச்சுப் பார்த்த டாக்டர், 'இது வெர்ட்டிகோ பிரச்னை’ன்னு சொன்னார். அந்தப் பேரும் எனக்குப் புரியலை. அந்தப் பிரச்னையும் இப்போ வரைக்கும் தீரலை!'' - நமது வாசகியான ஜெயஸ்ரீ சொன்ன சோகம் இது. அது என்ன 'வெர்ட்டிகோ’ பிரச்னை? 

''ஒரு நாள் என் அலுவலகத்தில் உட்கார்ந்து எழுதிட்டு இருந்தேன். எழுந்திருக்கணும்னு நிமிர்ந்து பார்த்தா, தலை தண்ணிக்குள்ள மிதக்குற மாதிரி ஒரு உணர்வு. அதே சமயம், யாரோ தலையைப் பிடிச்சு அழுத்துற மாதிரியும் இருந்துச்சு. அதையும் மீறி எழுந்து நடக்க முயற்சி செய்தேன். எந்தப் பக்கம் திரும்பினாலும் அந்தப் பக்கமே சுத்துற மாதிரியே இருந்துச்சு. நேரா நடக்கணும்னு காலை எடுத்துவெச்சா, கால் கோணலாப் போகுது. எப்படியோ என் தோழியிடம் எனக்கு ஏற்பட்ட மாற்றங்களைச் சொன்னேன். 'ஏதாவது நாள் தள்ளிப்போச்சா?’னு கேட்டாங்க. எனக்குக் கொஞ்சம் மயக்கமா இருந்ததால், பொது மருத்துவர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. என்னைப் பரிசோதனை செய்தவர், 'இது வெர்ட்டிகோ (Vertigo)  பிரச்னையா இருக்கலாம்’னு மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்