தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

குழந்தைகளின் தூக்கம் தொடர்பான பிரச்னைகளில் முக்கியமானதாக இருப்பது 'பல் கடித்தல்’ பழக்கம். உறக்கத்தில் திடீரென நறநறவெனப் பற்களைக் கடித்துக்கொள்வார்கள். அந்தச் சமயத்தில் குழந்தையை எழுப்பிக் கேட்டாலும் எதுவும் அவர்களுக்கு ஞாபகத்தில் இருக்காது. பெரும்பாலும் குழந்தைகளின் மனதில் அழுந்திக்கிடக்கும் ஏதோ ஒரு கவலைதான் இப்படிப் பல் கடிப்பாக வெளிப்படுகிறது. குழந்தைகள் முன்னிலையிலேயே வீட்டில் அப்பா-அம்மா சண்டையிடுவது அல்லது சரியாகப் படிக்கவில்லை என்று குழந்தையைத் திட்டுவது என இதன் பின்னணியில் ஏதாவது ஒரு காரணம் ஒளிந்திருக்கும். வயிற்றுப் பூச்சித் தொந்தரவு இருந்தாலும் சில குழந்தைகள் இதுபோன்று தூக்கத்தில் பற்களைக் கடிக்கும். இப்படித் தொடர்ந்து பற்களைக் கடிப்பதால், பற்களின் மேல் இருக்கும் எனாமல் பாதிப்புக்கு உள்ளாகும். இதைத் தடுக்க குழந்தையின் பற்களுக்கு இடையே 'டூத் கார்டு’ (Tooth guard) பொருத்தலாம். குழந்தையுடன் பேசி அதன் மனக் கவலையைத் தீர்க்கும்விதமாக ஆலோசனை வழங்குவதே இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்