சத்யராஜ் ஆரோக்கிய ரகசியம்

''இமயமலைக்குப் போகணும்னு மனசு மட்டும் ஆசைப்பட்டு என்ன பண்றது; உடம்பும் ஒத்துழைக்கணுமே!'' - வழக்கமான லொள்ளு குறையாமல் தனது ஆரோக்கியம் குறித்து நம்மோடு பேச ஆரம்பிக்கிறார் சத்யராஜ். மனிதருக்கு 58 வயதாம். ஆனால், தோலில் சின்ன சுருக்கம்கூட இல்லை. ஆரோக்கியத்திலும் நம்மை அண்ணாந்து பார்க்கவைக்கிறார். 

''உடற்பயிற்சி செய்ற பழக்கம் என்கிட்ட இருக்கிறதாலதான் நான் ரொம்ப சுறுசுறுப்பா இருக்கிறதா நினைச்சிட்டு இருந்தேன். சமீபத்துலதான் படிச்சேன்... உடற்பயிற்சி செய்யும்போது என்டார்ஃபின்கிற அமிலம் சுரக்குதாம். அந்த அமிலத்தோட தன்மை என்னன்னா, சோர்வாக் கிடக்கும் மனநிலையைச் சுறுசுறுப்பு ஆக்கிடு மாம். எப்பவுமே சோகமா இருக்கேன்னு மனநல மருத்துவர்கிட்ட போனா, என்டார்ஃபின் கலந்த மருந்துதான் அவரும் கொடுக்கிறார். ஆக, உடற்பயிற்சி செய்றதுல என்ன ஒரு வசதி பாருங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்