கவசமுடையோர் காயமடையார்!

மீபத்தில் நண்பர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்துகொண்டு இருந்தார். வாகனத்தை அவரது உறவினர் ஓட்ட, இவர் பின்னால் அமர்ந்து சென்றார். திடீரென ஆட்டோ ஒன்று குறுக்கே வர, மோதலைத் தவிர்க்கும் எண்ணத்துடன் பிரேக் பிடித்துள்ளார் உறவினர். இதில் நிலைதடுமாறிய வாகனம் கீழே விழ, நண்பரோ தூக்கி எறியப்பட்டார். தலையில் பலத்த காயம்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இதுபோன்று பல சம்பவங்கள் தினம் தினம் நடக்கின்றன. இதுபோன்ற உயிர் இழப்புக்கு முக்கியக் காரணம்... ஹெல்மெட் (தலைக் கவசம்) அணியாதது. 

தமிழகத்தில் பெரும்பாலான விபத்துகள் இரு சக்கர வாகனங்களால்தான் நடக்கின்றன. இதுபோன்ற விபத்துகளில் பலரும் தலையில் பலத்த காயமடைந்துதான் உயிர் இழந்திருக்கிறார்கள். அதனால்தான் ஹெல் மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இருப்பினும் நிறையப் பேர் ஹெல்மெட் அணிவது இல்லை. ஹெல்மெட் அணிபவர் களில் சிலரும் சாலை ஓரத்தில் விற்கப்படும் தரமற்ற ஹெல்மெட்டை வாங்கி அணிகிறார்கள். இந்தச் சாலையோரக் கடைகளில், ஐ.எஸ்.ஐ. முத்திரை (?!) கொண்ட ஹெல்மெட்டாக இருந்தாலும் சரி, விலை உயர்ந்த (தரத்தில் அல்ல) ஹெல்மெட்டாக இருந்தாலும் சரி... பேரம் பேசி 150 ரூபாயில் இருந்து 200 ரூபாய்க்குள் வாங்கிவிட முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்