எச்சில் மூலம் எல்லாவற்றையும் அறியலாம்!

வந்துவிட்டது டி.என்.ஏ. பரிசோதனை

ணையக் கோயிலான கூகுள் டாட் காமின் நிறுவனர்களில் ஒருவர் சேர்ஜி பிரின். சில ஆண்டுளுக்கு முன் அவர் டி.என்.ஏ. பரிசோதனை  செய்துகொண்டார். அவருக்கு 'எல்ஆர்ஆர்கே2’ என்ற ஜீன் குறியீட்டில் மாற்றம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனால், எதிர்காலத்தில் அவருக்கு 'பார்கின்சன்ஸ்’ என்கிற நடுக்குவாத நோய் வருவதற்கான வாய்ப்பு 50 சதவிகிதம் உள்ளது என்ற விஷயம் தெரியவந்தது. 24 மணி நேரமும் வேலை, வேலை என்று ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டு இருந்தவர், அதன் பிறகு தன்னுடைய வாழ்க்கைமுறையைக் கொஞ்சம் மாற்றி உடல் நலனிலும் அக்கறை செலுத்த ஆரம்பித்தார். நடுக்குவாதம் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர்களிடமும் உடற்பயிற்சி வல்லுநர்களிடமும் அவர் கேட்டபோது, யோகா, நீச்சல் பயிற்சிகளைச் சுட்டிக்காட்டினர். யோகாவும் நீச்சலும் நடுக்குவாதம் வருவதற்கான வாய்ப்பை 25 சதவிகிதமாகக் குறைத்தன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்