சத்தான உணவு... சமத்தான படிப்பு!

'அடடே' பள்ளிக்கூடம்

ரு பள்ளிக்கூடம் சாப்பிடக் கற்றுக்கொடுக்க வேண்டுமா? ''ஆமாம்'' என்கிறார்கள் கரூர் மாவட்டம்,  வாங்கலில் உள்ள குருதேவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியினர். ''சாப்பிடுவது ஒரு கலை என்றால், அதையும் ஒரு பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுக்க வேண்டும்தானே?'' என்கிறார் பள்ளியின் நிர்வாகத் தலைவர் பாப்பம்மா. 

''1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் நண்பகல் உணவும், இடைவேளை சிற்றுண்டியும் இங்கேயே கொடுக்கிறோம். செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல் இயற்கையாக விளைந்த காய்கறிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கொள்ளு குறைக்கும் என்பதால், எங்கள் உணவில் கொள்ளு தவறாமல் இடம்பெறும். இதனால், தொப்பை விழுந்த ஒரு மாணவரைக்கூட எங்கள் பள்ளியில் பார்க்க முடியாது. அடுத்தது பிரண்டைத் துவையல். இது செரிமான உறுப்புகளைச் செம்மைப்படுத்தும். வல்லாரைத் துவையல் நரம்புகளை வலுப்படுத்தி நினைவாற்றலைப் பெருகச் செய்யும். வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு துவையல் என்ற கணக்கில் உணவோடு கொடுக்கப்படும். அதேபோல், உடலுக்கு நலம் தரும் சுண்டைக்காய், புதினா, கொத்தவரங்காய், கொத்த மல்லி, கறிவேப்பிலை சட்னிகளும் உணவில் ஒரு பகுதியாகத் தரப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்