வியாதி அல்ல வெண்புள்ளி!

'வெண்புள்ளி’ பாதிப்பு கொண்டவர்களை எதிரில் கண்டால் வெறித்துப் பார்ப்பவர்களும் முகத்தைத் திருப்பிக்கொள்வோரும்தான் அதிகம். 'வெண்புள்ளி பாதிப்பு என்பது ஒரு நோயே அல்ல... எனவே, அதை வெண் குஷ்டம் என்று அழைப்பதே தவறு’ என்று உறுதிபடச் சொல்கிறது மருத்துவ விஞ்ஞானம். ஆனாலும், இந்த மருத்துவ உண்மை இன்னமும் சமூகத்தின் காதுகளுக்கு எட்டவில்லை என்பதற்கு இந்தச் சம்பவமே ஓர் உதாரணம்....

 திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஐயப்பன். வாய் பேச முடியாதவர். தனியார் பல்கலைக்கழக மாணவர். இவரது பெற்றோர் கூலித் தொழிலாளிகள். இவரது உடலில் ஏற்கெனவே வெண்புள்ளிப் பிரச்னை இருந்தது. இந்த நிலையில், திடீரென வெண்புள்ளிகள் அதிக அளவில் பரவ ஆரம்பிக்க, உடன் படிக்கும் மாணவர்கள், 'தங்களுக்கும் வெண்புள்ளி பரவிவிடுமோ’ என்ற பயத்தில் ஐயப்பன் அருகில் செல்லத் தயங்கியதோடு தங்கள் பெற்றோரிடமும் இதுகுறித்துப் புகார் கூறி உள்ளனர். இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து, 'எங்கள் பிள்ளைகளை வெண்புள்ளி பாதித்த மாணவர் அருகில் எப்படி உட்கார வைக்கலாம்?’ என்று சண்டை போட்டு இருக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்