கு.க-வுக்குப் பிறகும் குழந்தை!

நாகப்பட்டினம் அருகே உள்ள குக்கிராமம் அக்கரைப்பேட்டை. சுனாமி அடித்தபோது நிர்மூலமான கிராமம். கடல் அள்ளிக்கொண்டுபோன எல்லாவிதப் பொருட்களுக்கும் இழப்பீடு வழங்கியது அரசு. அப்போதைய நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணனிடம் சுகந்தி என்கிற பெண் கதறலோடு வந்தார். ''எனக்கு சொத்து வேணாம்... ஒண்ணும் வேணாம். என்னோட மூணு குழந்தைகளும் சுனாமியில போயிட்டாங்க. நாலு வருஷத்துக்கு முன்னால நான் கர்ப்பத் தடை பண்ணிக்கிட்டேன். எனக்கு மறுபடியும் குழந்தை வேணும். குழந்தைங்க இல்லாம என்னால வாழவே முடியாது. ஏதாவது மருத்துவ உதவி பண்ணுங்கய்யா'' எனக் கதறினார் அந்தப் பெண். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அத்தனை பேரின் கண்களும் கலங்கிவிட்டன. உடனடியாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட, ஆலோசனை நடைபெற்றது. அப்போது மருத்துவர்கள் எடுத்த முடிவு... சுனாமியால் பாதிக்கப்பட்டு, குழந்தைகளை இழந்த பெண்களுக்கு கருத்தடை நீக்க அறுவைச் சிகிச்சை செய்வது. டாக்டர்களின் முயற்சி வெற்றிகரமாக நடந்தேற, சுகந்தி உள்ளிட்ட 20 பெண்கள் மறுபடியும் தாயாகிப் பூரித்தார்கள். 

ஒரு குடும்பம் ஒரு வாரிசு என்பதுதான் இப்போது பல தம்பதிகளுக்குத் தாரக மந்திரம். அதனால், ஒரு குழந்தைக்குப் பிறகு பல தம்பதிகள் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்துகொள்கிறார்கள். ஆனால், சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தின் காரணமாகவோ அல்லது எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு விபத்து நிகழ்ந்து குடும்ப வாரிசான அந்த ஒரே குழந்தைக்கும் ஏதாவது ஒரு விபரீதம் நிகழ்ந்துவிட்டால்? அதுபோன்ற தருணங்களில் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்ட  தம்பதிகள் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள வழி இருக்கிறதா? ''நிச்சயம் உண்டு...'' என்கிறார் மகளிர் சிறப்பு அறுவைச் சிகிச்சை நிபுணரான ஸ்ரீதேவி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்