Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

 

 

 

'ஆரோக்கியமான தூக்கம்’ என்பது எப்படி இருக்க வேண்டும் போன்ற தூக்கம்பற்றிய பல உண்மைகளை இங்கே நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் டாக்டர் என்.ராமகிருஷ்ணன்.   நித்திரையைத் துறந்து நிம்மதி இன்றித் தவிப்பவர்களுக்காக சிகிச்சை அளிக்கும் 'நித்ரா’ என்ற சிறப்பு மையத்தை சென்னை அண்ணா நகரில் நடத்திவருகிறார்.  

''தூக்கம்...

போதுமான அளவு தூக்கம் இல்லை என்றால், தேவை இல்லாமல் கோபம் வரும். எதிர்ப்படுபவர்களிடம் எல்லாம் எரிந்து விழுவோம்.  கண்களில் கருவளையம் விழும். உடல் பலவீனம் அடைவதோடு, பைத்தியம் பிடித்தது மாதிரி இருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு பேஷன்ட் ஒருவர் விநோதமான ஒரு புகாரோடு வந்திருந்தார். ''டாக்டர் எனக்குத் தூக்கமே வர்றதில்லை. நான் தூங்கி 15 வருஷம் ஆச்சு. ஆனா, எனக்கு எந்தவிதப் பலகீனமோ, நோயோ வந்தது இல்லை. இது என்ன விதமான நோய்? இதனால், பின்னாளில் எனக்கு வேற ஏதும் பாதிப்பு இருக்குமா?'' என்று நிதானமாகக் கேட்டார்.

'வருடக்கணக்கில் தூங்காமல் வாழும் அதிசய மனிதர்!’ என்று கட்டம் கட்டி வெளியாகும் இது போன்ற செய்திகளை நானும் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். ஆனால், ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்லட்டுமா?

எந்த மனிதனாலும் வருடக்கணக்கில் தூங்காமல் இருக்கவே முடியாது! என்பதுதான் அது. ஒரு நாளில் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்ற பொதுவான கேள்வியை எல்லோரிடமும் கேட்டால், கிடைக்கும் பதில் ஆளாளுக்கு வித்தியாசப்படும். நிறையப் பேர் ஆறில் இருந்து எட்டு மணி நேரம் தூங்குவார்கள். இன்னும் சிலரோ ஒன்பது மணி நேரம் தேவை என்பார்கள். வயதானவர்கள் சிலர் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரத்துக்குள்ளாகவே தூங்கி எழுந்துவிடுவார்கள். ஆக, உடல் ஆரோக்கியம், உழைப்பு, தூங்கும் விதத்தைப் பொறுத்து ஒவ்வொருவரின் தூக்க நேரம் வேறுபடும்.  

ஆனால், மேலே குறிப்பிட்ட நபரைப் போல 'ஒட்டுமொத்தமாக நான் தூங்குவதே கிடையாது’ என்று யார் சொன்னாலும் அது உண்மை இல்லை.  நடைமுறையில்  அது சாத்தியமும் இல்லை. அப்படி என்றால், இந்த நோயாளி சொல்வது பொய்யா... பொய் இல்லை. ஆனால், நோயாளி தன்னையும் அறியாமல் அப்படிச் சொல்கிறார் என்பதே பதில்!

அதாவது, 'எனக்குத் தூக்கம் வரவில்லை... வரவும் வராது’ என்று ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், அவருடைய ஆழ்மனது நம்பத் தொடங்கி இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி தற்செயலாக நடைபெற்ற சில சம்பவங்களையும் ஆழ்மனது கோத்துவைத்துள்ளது. இதனால், 'தனக்குத் தினமும் தூக்கமே வரவில்லை. 24 மணி நேரமும் நாம் விழித்துக்கொண்டே இருக்கிறோம்’ என்று திடமாக அவர் நம்பத் தொடங்கிவிட்டார். ஆனால், தன்னையும் அறியாமல், தினமும் சில மணி நேரம் அவர் ஆழ்ந்த நிலையில் துயில்கொள்கிறார் என்பதே நிஜம். ஆனாலும், அவரையும் அறியாது இது நடப்பதால், தான் உறங்கிய பொழுதுகளையே அவரால் உணர்ந்துகொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை!

ஆனாலும், 'நீங்கள் சொல்வது நம்புகிற மாதிரி இல்லையே?’ என்று நோயாளியிடம் நேரடியாகச் சொல்லிவிட முடியாது. அதனால், அவருடைய தொழில், தினசரி நடவடிக்கைகள் எனப் பின்னணி நிலவரங்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ளும் முயற்சியில் இறங்கினேன்.

நகரத்தின் வெற்றிகரமான ஒரு தொழில் அதிபர் அவர். நாளுக்கு நாள் ஏற்றம் கண்டுவரும் அவரது தொழில் வியூகமும், வேகமுமே அவர் நல்ல ஆரோக்கியமான உடல் - மன நிலையில் உள்ளார் என்பதைத் தெளிவாக்கியது. ஆனாலும், அவருக்கு உள்ள பிரச்னையை எடுத்துச் சொல்லும்விதமாக 'உங்களுக்கு தூக்கம் ஏன் வரவில்லை என்பதை ஒரு டெஸ்ட் செய்து பார்த்துவிடுவோம். வாருங்கள்’ என்று நான் அழைக்கவும், லேசான அதிர்ச்சியோடு திருப்பிக் கேட்டார் அந்த நோயாளி...

'என்னது, தூக்கத்துக்கு டெஸ்ட்டா?’

- ஆராரோ ஆரிரரோ... 

இரவில் தூங்குவதும்,  காலையில் விழித்து எழுவதும் தினமும்  ஒரே நேரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது!

 தூக்கத்தில் குறட்டைவிடுவது 'ஸ்லீப் ஆப்னியா’ (Sleep apnea) என்ற நோயின் அறிகுறி. இதனைக் குணப்படுத்தவும் சிகிச்சை முறைகள் உள்ளன.

 தூக்கமின்மையால் பி.பி., ஷ§கர், ஹார்ட் அட்டாக்.... போன்ற பல்வேறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
மண் வாசம்!
இப்படிக்கு வயிறு!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close