மருமகன் காப்பீட்டில் இனி மாமனாரும்..

ஃப்ளோட்டர் பாலிசி பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். கணவன், மனைவி, குழந்தைகள் என நம்முடைய குடும்பத்துக்கு மட்டும் எடுத்துக்கொள்வது ஃப்ளோட்டர் பாலிசி. ஆனால், கூட்டுக் குடும்பமாக வாழ்பவர்களுக்கு பாலிசி எடுக்கும்போதும் தனித்தனிக் குடும்பமாகவே ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க வேண்டி இருந்தது. ஒரே பாலிசியில் மொத்தக் குடும்பத்துக்கும் மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்ளும் வசதி இப்போது வந்திருக்கிறது. இந்த பாலிசி மூலம் 13 குடும்ப உறுப்பினர்கள் வரை மருத்துவக் காப்பீடு செய்துகொள்ளலாம்.

குடும்பத் தலைவர், தன்னுடைய மகன்கள், மகள்கள், அப்பா, அம்மா, மாமனார், மாமியார், மருமகள், பேரக் குழந்தைகளுக்கு மருத்துவக் காப்பீடு எடுக்க முடியும். ஆனால், அவரது சகோதரர், சகோதரிக்கு மருத்துவக் காப்பீடு எடுக்க முடியாது. அதேபோல, ஒரு மாமனார் நினைத்தால் மருத்துவக் காப்பீட்டில், மருமகனைச் சேர்த்துக்கொள்ள முடியாது. ஆனால், மருமகன் தன்னுடைய மாமனாரை பாலிசியில் சேர்த்துக்கொள்ள முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்