மனம்விட்டுப் பேசினால்... நோய்விட்டுப் போகும்!

''வீடு, அலுவலகம், சம்பளம், சேமிப்பு என ஓடிக்கொண்டே இருக்கும் இன்றைய பரபரப்பான வாழ்க்கையில்... குழந்தைகளோடு நாம் செலவழிக்கும் நேரமும் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது. விளைவு.... 'ங்கா’வில் ஆரம்பித்து அம்மா, அத்தை, தாத்தா, பாட்டி.... என்று தத்தித் தடுக்கிப் பேசிப் பழகும் மழலைச் சொற்களுக்கும் காது கொடுக்காவிட்டால், நாளடைவில் குழந்தைகளின் பேச்சுத் திறனும் மழுங்கிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது.'' -குழந்தைகளின் பேச்சுப் பயிற்சிக்காக மருத்துவமனை வளாகங்களில் வரிசையாகக் காத்திருக்கும் தாய்மார்களின் கூட்டமே டாக்டர் சாந்தி நம்பியின் ஆதங்கத்தை உறுதிப்படுத்துகிறது.   

''அந்தக் காலத்தில் பாட்டிமார்களின் பேச்சு சத்தத்துடன், குழந்தைகளின் விளையாட்டுச் சத்தமும் கலந்து வீடே கலகலவென்று இருக்கும். ஆனால், இன்று மாலையானதும் எல்லா வீடுகளிலும் டி.வி. சத்தம்தான் கேட்கிறது. டி.வி-யைத் தூக்கிப் பரண் மேல் போடுங்கள். வாய் பேசாத மழலையும் வாய் திறக்கும்'' என்கிறார் எழும்பூர் அரசு குழந்தைகள் மனநல மருத்துவரான சாந்தி நம்பி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்