கணவரைக் காத்த மாலதி

''என் மாமாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இவரைத்தான் கட்டிக்குவேன்னு அடம்பிடிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் முதன்முதலா கடவுள் சன்னிதானத்துல கையேந்தி நின்னது எந்த சந்தர்ப்பத்துல தெரியுமா? என் மாமாவுக்கு உயிர்ப் பிச்சை கேட்டு...'' - கணவனின் உயிரைக் கட்டி நிறுத்திய சாவித்ரியாய்ப் பேசுகிறார் திருவாரூரைச் சேர்ந்த மாலதி. தன் கணவர் அன்புச்செல்வனின் இரு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்ட நிலையில், தனது சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுத்து, கணவரைக் காப்பாற்றி இருக்கிறார் மாலதி.

''இவர் எங்க அம்மாவோட சொந்தத் தம்பி. சிகரெட், குடிப் பழக்கம்னு எந்தக் கெட்ட விஷயமும் கிடையாது. எல்லாத்துக்கும் மேல அவங்க அம்மா மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தப்போ, அவங்களைக் குளிப்பாட்டுறதில் தொடங்கி, சாப்பாடு சமைச்சு ஊட்டுறது வரைக்கும் எல்லாத்தையும் தனியாவே இருந்து பார்த்துக்கிட்டவர். அந்தக் குணத்துக்காகவே இவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். கல்யாண சமயத்தில் ஓமனில் மேனேஜரா வேலை பார்த்துட்டு இருந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தப்போ ஒரு நண்பரைப் பார்க்கப் போயிருந்தார். அவர்தான் இவருடைய வலது பக்க வயிறு கொஞ்சம் பெருசா இருந்ததைப் பார்த்து, 'இது கிட்னி பிராப்ளமா இருக்கலாம். என் தங்கச்சிப் பையனுக்கும் 18-வயசுல இப்படிதான் இருந்துச்சு. கவனிக்காமவிட்டதால், அவன் தவறிட்டான். உடனடியா ஒரு டாக்டரைப் போய் பார்’னு சொல்லியிருக்கார். அவருடைய எச்சரிக்கைதான் இன்னைக்கு இவர் உயிரோட இருக்கக் காரணம்'' என்கிற மாலதியை அன்புடன் பார்க்கிறார்  அன்புச்செல்வன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்