மாஸ்டர் செக் - அப் ஆடம்பரமா... அவசியமா?

''எங்கள் மருத்துவமனைக்கு முழு உடல் பரிசோதனை (மாஸ்டர் ஹெல்த் செக்-அப்) செய்துகொள்வதற்காக வந்திருந்தார் அவர். கூடவே  கேஷ§வலாக அவருடைய நண்பர் ஒருவரும் வந்து இருந்தார். 'நான் சும்மா... இவனுக்குக் கம்பெனிக்காக’ என்றார். இருவருக்கும் உடல் பரிசோதனை முடிந்தது. சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். பரிசோதனையின் முக்கியத்துவம் தெரிந்து தன் உடம்பில் ஏதேனும் கோளாறு இருக்குமோ என்ற பதைபதைப்பில் வந்தார் இல்லையா, அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், கூட சும்மா கம்பெனிக்கு வந்த நண்பருக்கு சர்க்கரை நோயில் தொடங்கி, சிறுநீரகக் கற்கள் வரை அவ்வளவு பாதிப்புகள். இதை நகைச்சுவைக்காக நான் சொல்லவில்லை. நமக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என்பதுதான் ஒவ்வொருவருடைய நம்பிக்கையும். ஆனாலும், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையும் சுற்றுச்சூழல் கேடுகளும் எவரையும் நோயாளியாக்கிவிடும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்'' - எச்சரிக்கும் அக்கறையோடு தொடங்குகிறார் டாக்டர் மதுபாஷினி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்