மண் வாசம்

''கடப்பாறையில இடிச்ச மாதிரிப் பொளக்குது. டீச்சருகிட்ட இன்னிக்கு மேல் வேலை முடியாதுன்னு செத்த சொல்லிடு'' என்ற எல்லம்மாவுக்கு வயசு தெரியாத உடல்வாகு. பச்பச்சென்று கை நிறையக் கீரைக்கட்டு வைத்திருந்தாள். நான் பார்ப்பதைக் கவனித்து, ''வெந்தயக்கீரை செமதி, சீரணத்துக்கு நல்லது. அதோட உட்கார்ந்தே வேலை செய்றேன்ல... இடுப்பு கடுக்குது. இந்த வெந்தயக் கீரையோட நாட்டுக்கோழி முட்டை, தேங்காய்ப்பால் சேர்த்துப் பசு நெய்யில வேகவைச்சுச் சாப்பிட்டாத் தேவலையாயிடும்னு ஓட்டு வீட்டுக்காரம்மா சொல்லுச்சு'' என்றவள், இடுப்பில் செருகி இருந்த சின்ன சீசாவை எடுத்து மூடியை அழுந்த மூடி மறுபடியும் செருகிக்கொண்டாள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்